நுவரெலியா பொது வைத்தியசாலை வைத்தியர்கள் வேலைநிறுத்தம் : சிரமத்திற்குள்ளாகிய நோயாளர்கள்
நாடளாவிய ரீதியில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) இன்று (மார்ச் 12) காலை 8.00 மணி முதல் நாடளாவிய ரீதியில் 24 மணித்தியால அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக நுவரெலியா (Nuwara Eliya) மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர்களும் பணிப்பகிஸ்கரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் (Anuradhapura Teaching Hospital) பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே குறித்த அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை அரச மருத்து அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்துள்ளது.
நோயாளர்கள் பாதிப்பு
இதன் காரணமாக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலை நடவடிக்கைகள் சற்று ஸ்தம்பிதமடைந்துள்ள நிலையில் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலைக்கு வந்த நோயாளர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
குறிப்பாக வெளிநோயாளர் பிரிவு முற்றாக செயலிழந்து காணப்பட்டதனால் தூர இடங்களில் இருந்து நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு சிகிச்சைகளுக்காக வந்த வயோதிபர்கள், பெண்கள், கர்ப்பிணிகள் என பலர் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.
எனினும் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படும் நிலையில் விபத்து, அவசர சிகிச்சை, மகப்பேறு என்பன வழமை போல் இயங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |




உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்… 4 நாட்கள் முன்

நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
1 வாரம் முன்