நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம்
Ranil Wickremesinghe
Curfew
SL Protest
Sri Lanka Anti-Govt Protest
By Vanan
நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம்
நாளை (14) காலை 5 மணி வரை நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
பிரதமர், பதில் அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் இது குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்துக்கு முன்னால் பதற்றம்
நாடாளுமன்றத்துக்கு முன்னால் பதற்றம் அதிகரித்ததை தொடர்ந்து பாதுகாப்பு தரப்பினர் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொள்ள ஆரம்பித்திருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அங்கு பலத்த பாதிப்புகளை ஏற்படுத்தும் வண்ணம் துப்பாக்கி பிரயோகம் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.
அதே சமயம் போராட்டக்காரர்களும் எதிர்தாக்குதலை நடத்துவதற்கு தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், நிலைமைகளை கட்டுப்படுத்த நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

