ஈரான் மீதான தாக்குதலை முடித்து விட்டதாக இஸ்ரேல் அறிவிப்பு

Benjamin Netanyahu Israel Iran World
By Thulsi Oct 26, 2024 05:48 AM GMT
Report

புதிய இணைப்பு

ஈரான் மீது இன்று காலை தொடங்கிய இஸ்ரேல் இராணுவம், சில மணி நேரங்களில் தாக்குதலை முடித்துவிட்டதாக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக இஸ்ரேல் இராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி இன்று வெளியிட்டுள்ள 2ஆவது வீடியோ பதிவில், "இஸ்ரேலுக்கு எதிரான ஈரானின் தாக்குதல்களுக்கு இஸ்ரேலின் பதிலடியை நாங்கள் முடித்துவிட்டோம் என்பதை இப்போது என்னால் உறுதிப்படுத்த முடியும்.

நாங்கள் ஈரானில் உள்ள இராணுவ இலக்குகள் மீது துல்லியமான தாக்குதல்களை நடத்தினோம். இதன் மூலம், இஸ்ரேல் அரசுக்கு இருந்த உடனடி அச்சுறுத்தல்களை முறியடித்தோம். ஈரான் மீண்டும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துமானால், இஸ்ரேல் நாட்டையும் மக்களையும் காக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இஸ்ரேல் எடுக்கும்" என தெரிவித்துள்ளார்.

முதலாம் இணைப்பு

ஈரானில் (Iran) இராணுவ தளங்கள் மீது "துல்லியமான தாக்குதல்களை" நடத்தி வருவதாக இஸ்ரேல் (Israel) பாதுகாப்புப் படைகள் உறுதிப்படுத்தியுள்ளது. 

இஸ்ரேலுக்கு எதிராக ஈரானில் இருந்து பல மாதங்களாக நடத்தப்படும் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு விடையளிக்கும் வகையில் தாக்குதலை ஆரம்பித்துள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை எக்ஸ் (X) வலைதளத்தில் வெளியிட்ட காணொளியில் குறிப்பிட்டுள்ளது.

ஈரானின் தலைநகர் தெஹ்ரான் (Tehran) மீதான தாக்குதலை இஸ்ரேல் இன்று சனிக்கிழமை (26.10.2024) அதிகாலை ஆரம்பித்துள்ளதாக ஈரானிய ஊடகங்கள் செய்திகள் உறுதிப்படுத்தியுள்ளன.

ஈரான் தலைநகரில் கேட்கும் பலத்த வெடிச்சத்தங்கள் : தாக்குதலை ஆரம்பித்த இஸ்ரேல்

ஈரான் தலைநகரில் கேட்கும் பலத்த வெடிச்சத்தங்கள் : தாக்குதலை ஆரம்பித்த இஸ்ரேல்

இராணுவ தளங்களை குறிவைத்து தாக்குதல்

ஈரான் தலைநகர் டெக்ரான் மற்றும் அதன் அருகே உள்ள கராஜ் நகரங்களை குறிவைத்து நடந்த தாக்குதலில் பெரிய அளவில் சேதம் எதுவும் இல்லை என்று ஈரான் தெரிவித்துள்ளது.

போரை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்குமாறு ஈரான் இராணுவத்திற்கு அந்நாட்டின் உயர் தலைவர் அயதுல்லா அலி காமேனி அறிவுறுத்தி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தினால், அந்த தாக்குதலின் தீவிரத்தை பொறுத்து அதற்கு ஏற்றவாறு பதிலடி கொடுக்க ஈரான் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இஸ்ரேல் இராணுவத்தின் தாக்குதலால் ஈரானில் பெரிய அளவிலான சேதமோ, உயிரிழப்புகளோ ஏற்பட்டால், பதிலுக்கு ஈரான் இராணுவம் மிகப்பெரிய அளவில் பதில் தாக்குதல் நடத்தும் என்றும், அதே சமயம் ராணுவ தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டால் அதற்கேற்றவாறு பதிலடி கொடுப்போம் என்றும் ஈரானைச் சேர்ந்த இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

லெபனானில் இஸ்ரேலியப் படைகள் தேடிவருகின்ற ஹிஸ்புல்லாக்களின் பிரம்மாஸ்திரங்கள்!

லெபனானில் இஸ்ரேலியப் படைகள் தேடிவருகின்ற ஹிஸ்புல்லாக்களின் பிரம்மாஸ்திரங்கள்!

இலக்குகள் மீது துல்லியமான தாக்குதல்

இதுதொடர்பாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை பதிவில், இஸ்ரேல் அரசுக்கு எதிராக ஈரானில் இருந்து பல மாதங்களாக நடத்தப்படும் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு விடையளிக்கும் வகையில், இப்போது இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் ஈரானில் உள்ள இராணுவ இலக்குகள் மீது துல்லியமான தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

ஈரானில் உள்ள ஆட்சியும், பிராந்தியத்தில் அதன் ஆதாரவாளர்களும் அக்டோபர் 7ம் திகதி முதல் ஈரானிய மண்ணில் இருந்து நேரடி தாக்குதல்கள் உட்பட ஏழு முனைகளில் இருந்து இஸ்ரேலை இடைவிடாமல் தாக்கி வருகின்றனர்.

உலகில் உள்ள மற்ற இறையாண்மை கொண்ட நாடுகளைப் போலவே, இஸ்ரேலுக்கும் பதிலளிக்கும் உரிமையும் கடமையும் உள்ளது. எங்கள் தற்காப்பு மற்றும் தாக்குதல் திறன்கள் முழுமையாக அணிதிரட்டப்பட்டுள்ளன.

இஸ்ரேல் நாட்டையும் இஸ்ரேல் மக்களையும் பாதுகாக்க தேவையான அனைத்தையும் செய்வோம்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: கருத்துக் கணிப்பில் முன்னிலை பெற்றுள்ள டிரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: கருத்துக் கணிப்பில் முன்னிலை பெற்றுள்ள டிரம்ப்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!        


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, புலோலி தெற்கு, Croydon, United Kingdom, Sutton, United Kingdom

19 Oct, 2024
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, தெல்லிப்பழை

23 Oct, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், Colombes, France

23 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, சங்குவேலி

27 Oct, 2013
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை

26 Oct, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

23 Oct, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், நெளுக்குளம்

27 Oct, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பட்டிக்குடியிருப்பு, Naddankandal, முல்லைத்தீவு

26 Oct, 2023
மரண அறிவித்தல்

திருகோணமலை, Toronto, Canada

24 Oct, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Scarborough, Canada

26 Oct, 2022
மரண அறிவித்தல்

நாவலப்பிட்டி, வவுனியா, Markham, Canada

20 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

25 Oct, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, London, United Kingdom, கொழும்பு

26 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Gossau, Switzerland

25 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி

26 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, பரிஸ், France, சுவிஸ், Switzerland, Arnsberg, Germany

25 Oct, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, வரக்காப்பொல, Scarborough, Canada

23 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், கொழும்பு, Birmingham, United Kingdom

26 Oct, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, கோண்டாவில், கொழும்பு

20 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு

23 Oct, 2024
மரண அறிவித்தல்

Batu Gajah, Malaysia, சண்டிலிப்பாய், Mississauga, Canada

23 Oct, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், Scarborough, Canada

25 Oct, 2009
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் கிழக்கு, சாவகச்சேரி

24 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி, கிளிநொச்சி

25 Oct, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, வெள்ளவத்தை

25 Oct, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, ஆனைக்கோட்டை

15 Oct, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
மரண அறிவித்தல்

ஊறணி, காங்கேசன்துறை, நாவற்குழி, கொழும்பு, Toronto, Canada

18 Oct, 2024
மரண அறிவித்தல்

சுழிபுரம், Toronto, Canada

20 Oct, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, ஜேர்மனி, Germany

22 Oct, 2009
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Solingen, Germany, London, United Kingdom

16 Oct, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கரவெட்டி கிழக்கு, Jaffna, Barkingside, United Kingdom

25 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு இறுப்பிட்டி, கண்டி, கலிஃபோர்னியா, United States

29 Oct, 2023