பயங்கரவாதி போல செயற்படும் இஸ்ரேல்: வலுக்கும் எதிர்ப்பு

Sri Lanka Israel Israel-Hamas War
By pavan Oct 23, 2023 08:16 AM GMT
Report

காட்டுச் சட்டங்களை கையாளும் இஸ்ரேல், பயங்கரவாத அரசாங்கம் போல செயற்படுவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.  

நாடாளுமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (20) இடம்பெற்ற "காசா - இஸ்ரேல் மோதல்" குறித்த விவாதத்தில் உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், "பலஸ்தீனர்களின் இருப்பை மறுத்துவரும் இஸ்ரேல் அரசாங்கம், காசா மக்களை காட்டுமிராண்டித்தனமாக கொன்று குவிக்கிறது.

இஸ்ரேலின் கொலைத்தாண்டவம் 

இந்த மோதலில், காசாவில் மாத்திரம் நாலாயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில், 1200 பேர் குழந்தைகளாவர்.

பெண்கள், கர்ப்பிணித்தாய்மார்கள், முதியோர்களென இஸ்ரேலின் கொலைத்தாண்டவம் தலைவிரித்தாடுகிறது.

பயங்கரவாதி போல செயற்படும் இஸ்ரேல்: வலுக்கும் எதிர்ப்பு | Israel Palestine War Latest Update Today

12 வருடங்களாக குழந்தையின்றி நான்கு பிள்ளைகளைப் பெற்றவரும் பலியெடுக்கப்பட்டுள்ளார். இடிபாடுகளுக்குள் சிக்கித் தவிப்போர் இறுதி மூச்சுக்களை எண்ணிக் கொண்டிருக்கின்றனர்.

அப்பாவிகள் சிகிச்சை பெற்றுவந்த வைத்தியசாலையிலும் யூத இராணுவம் குண்டுகளை வீசியுள்ளது.

ஐநூறுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதற்காக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகர் டுவிட்டர் செய்தியில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். பின்னர் அந்தப் பதிவை நீக்கியுள்ளதாக ஐ.நா வுக்கான பலஸ்தீன தூதுவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கம்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேலிலிருந்த வேளையிலேயே, இவ்வைத்தியசாலை தாக்கப்பட்டது. நீரின்றி, மின்சாரமின்றி, உணவின்றி, தாகம், பசி, இருட்டுக்குள் உயிர்தப்பியோடும் காஸாவின் அவலங்கள், ஜோ பைடனின் கல்நெஞ்சை கசிய வைக்கவே இல்லை.

ஸியோனிஸவாதிகளின் இக்கொடூரங்களில் ஐரோப்பாவும் குளிர்காய்கிறது. இவ்விடயத்தில் இலங்கை அரசாங்கம் 'விழுந்தாலும் மீசையில் மண்படாதது' போன்று நடந்துகொள்கிறது. இஸ்ரேலில், வெறும் 1200 பேரளவிலான இலங்கையர்கள்தான் பணியாற்றுகின்றனர்.

பயங்கரவாதி போல செயற்படும் இஸ்ரேல்: வலுக்கும் எதிர்ப்பு | Israel Palestine War Latest Update Today

இதற்காகவா இந்த மெத்தனப்போக்கு? ஆனால், அரபு நாடுகளில் இலட்சக்கணக்கில் இலங்கையர்கள் பணியாற்றுகின்றனர். நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டபோது அரபு நாடுகளிலிருந்தே அதிகளவு உதவிகள் வந்தன.

எரிபொருளுக்காக 750 மில்லியன் டொலரை ஈரானே வழங்கியது. இதையெல்லாம் எண்ணாமல், யூத இராணுவத்தின் இனச்சுத்திகரிப்புடன் இணங்கிச்செல்லும் மேற்குலகின் நிழலிலே அரசாங்கம் செல்கிறது.

மனிதநேயம் மரித்துப்போன ஐரோப்பா மற்றும் ஏகாதிபத்தியத்தில் திளைத்துள்ள அமெரிக்கா என்பன முஸ்லிம்களுக்கு நியாயம் தரப்போவதுமில்லை. எனவே, முஸ்லிம்கள் ஒன்றுபட்டு நியாயங்களை தட்டிக்கேட்க வேண்டும்" என்றார்.

ReeCha
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

19 Mar, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026