வரலாற்றை உலுக்கும் இஸ்ரேலியர்களின் புலனாய்வுச் சாதனைகள்!!
எதிரியின் தேசத்தை வேவு பார்ப்பது என்பதோ, எதிரியின் தேசத்துக்குள் இரகசியமாகச் சென்று சதிநடவடிக்கைகளில் ஈடுபடுவது என்பதோ, எதிரியின் முக்கியஸ்தர்களைக் கொலைசெய்து அவர்களை நிலைதடுமாறவைத்து அப்படியான சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி எதிரி மீது தாக்குதல்கள் நடாத்துவது என்பதோ இஸ்ரேலியர்களைப் பொறுத்தவரையில் புதிதான ஒரு காரியம் கிடையாது.
வரலாறு ழுவதிலும் இஸ்ரேலியர்களின் உளவு நடவடிக்கைகள் பற்றி தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன.
அமெரிக்காவின் CIA உட்பட உலகின் பல்வேறு நாடுகளின் புலனாய்வுப் பிரிவுகள் கூட, பைபிளில் இஸ்ரேலியர்கள் மேற்கொண்ட பல உளவுச் செயற்பாடுகளில் இருந்த படிப்பினைகளைக் கடைப்பிடித்துவருவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள்.
அப்படிப்பட்ட இஸ்ரேலியர்களின் 3500 வருடங்களுக்கு முன்னைய ஒரு உளவுச் சாதனை பற்றிப் பார்க்கின்றது இன்றைய ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி:
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |