வீட்டு சின்னத்திற்கு வாக்களிப்பது வரலாற்று தவறு! எச்சரிக்கும் கே.வி.தவராசா
தமிழ் மக்கள் வீட்டு சின்னத்திற்கு வாக்களிப்பார்களாக இருந்தால் அதை விட வரலாற்று தவறு ஒன்றுமில்லை என ஐனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா (KV Thavarasha) தெரிவித்துள்ளார்.
ஐபிசி தமிழின் களம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “ 2009 வரை தமிழரசுக்கட்சி (Itak) தந்தை செல்வாவினால் உருவாக்கப்பட்ட நோக்கத்தின் அடிப்படையிலே இருந்தது.
அதன் பின்னரே இந்த மாற்றங்கள் வெளிவரத் தொடங்கின.
கட்சிக்குள் எப்போதும், தன்னிச்சையாகவே முடிவெடுப்பார்கள், இதற்கு மாவை சேனாதிராஜாவின் பலவீனமும் ஒரு காரணம் எனலாம். நாடாளுமன்றத்திலுள்ள பதவிக்காக நான் போட்டியிடவில்லை, தமிழ் தேசியத்தை பாதுகாப்பதே எங்களது நோக்கம்.
அரசியல்வாதிகளால் மக்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். சரியானவர்களை மக்கள் தெரிவு செய்ய வேண்டும்.
தமிழரசுக்கட்சியிலியிருந்து விலகியதே அங்கு நடப்பதை பற்றி மக்களுக்கு தெரியப்படுத்துவதற்காகத்தான்.” என்றார்
மேலும், 13 ஆம் திருத்தம், சமஸ்டி போன்ற விடயங்கள் தொடர்பில் அவர் தெரிவித்த கருத்துக்களை கீழுள்ள காணொளியில் காணலாம்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |