கொரோனா, குரங்கு அம்மை, எச்.ஐ.வி - ஒரே நேரத்தில் மூன்று தொற்றாலும் பாதிப்படைந்த நபர்! அதிர்ச்சிக்குள்ளாக்கிய சம்பவம்
இத்தாலியை சேர்ந்த 36 வயதுடைய நபர் ஒருவர் ஒரே நேரத்தில் கொரோனா, குரங்கு அம்மை மற்றும் எச்.ஐ.வி. போன்ற நோய்களால் பாதிப்படைந்ததுள்ளார். இந்த, சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இதுபோன்று 3 பெரு வியாதிகள் ஒரே நேரத்தில் ஒரு நபருக்கு ஏற்பட்டிருப்பது உலகிலேயே இதுதான் முதல் முறை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபர் கடந்த ஜூன் மாதம் 21 ஆம் திகதி ஸ்பெயின் நாட்டிற்கு சுற்றுப்பயணம் சென்று இத்தாலி திரும்பியிருந்தார். நாடு திரும்பிய அவருக்கு காய்ச்சலும், உடல் சோர்வும் ஏற்பட்டதை தொடர்ந்து மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார்.
உறுதியான சோதனைகள்
இதில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. எனவே அவரை மருத்துவர்கள் தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தனர். கொரோனா சிகிச்சையில் இருந்தபோது அந்த நபருக்கு உடலில் அரிப்பு ஏற்பட்டு கொப்புளங்கள் உருவானது.
மருத்துவர்கள் அவருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு இருக்குமோ என்று சந்தேகப்பட்டடு அதற்கான சோதனையை அவருக்கு செய்தனர். இதில் அந்த நபருக்கு குரங்கு அம்மை பாதிப்பு இருப்பதும் உறுதியானது.
கொரோனா, குரங்கு அம்மை நோய் பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில் அந்த நபர் ஏற்கனவே எச்.ஐ.வி. நோயில் இருந்து மீண்டவர் என்பதாலும் அவர் வெளிநாடுகளுக்கு சென்று வந்தவர் என்பதால் அவருக்கு மீண்டும் ஒரு முறை எச்.ஐ.வி. பரிசோதனையையும் மேற்கொள்ளபட்டது. அதன்படி எச்.ஐ.வி. பரிசோதனை செய்தபோது அதுவும் அந்த நபருக்கு இருப்பது உறுதியானது.
மருத்துவர்களுக்கு பெரும் அதிர்ச்சி
ஒரே நேரத்தில் கொரோனா, குரங்கு அம்மை மற்றும் எச்.ஐ.வி. பாதிப்புகள் ஒரே நபருக்கு ஏற்பட்டிருப்பது அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக அவர்கள் தொடர்ந்து அந்த நபரை கண்காணித்து வருகிறார்கள். தற்போது அவர் கொரோனாவில் இருந்தும், குரங்கு அம்மை பாதிப்பில் இருந்தும் மீண்டு வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

