போப் லியோ மீதான விமர்சனம் : ட்ரம்பின் விசுவாசியும் கடும் கண்டனம்
Donald Trump
Italy
Giorgia Meloni
Pope Leo XIV
By Jaso
"திருத்தந்தை குறித்து ஜனாதிபதி ட்ரம்ப் கூறிய வார்த்தைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று இத்தாலிய பிரதமர் ஜார்ஜியா மெலோனி கண்டனம் தெரிவித்துள்ளார்.
போப் கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவர், மேலும் அவர் அமைதிக்கு அழைப்பு விடுப்பதும், அனைத்து வகையான போர்களையும் கண்டிப்பதும் சரியானது மற்றும் இயல்பானது," என்று மெலோனி வெளியிட்ட அறிக்கையில் கூறினார்.
ட்ரம்பின் விசுவாசி
ஞாயிற்றுக்கிழமை அன்று ட்ரம்ப் போப்பிற்கு எதிராக ஒரு கடுமையான தாக்குதலைத் தொடுத்ததைத் தொடர்ந்து மெலோனியின் இந்த அறிக்கை வந்துள்ளது.

கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவரும், வலதுசாரி கூட்டணி அரசாங்கத்தின் தலைவருமான மெலோனி, டிரம்பின் நெருங்கிய கூட்டாளி ஆவார். போப் லியோ மீதான அமெரிக்க ஜனாதிபதியின் கடுமையான விமர்சனத்தைக் கண்டிக்க அவர் இதுவரை தயக்கம் காட்டி வந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்