யாழில் இடம்பெற்ற மற்றுமொரு விபத்து: ஒருவர் பலி...சாரதி தலைமறைவு
Sri Lanka Police
Jaffna
Sri Lanka Police Investigation
By Sathangani
யாழ்ப்பாணம் (Jaffna) - புன்னாலைக்கட்டுவன் பகுதியில் நேற்றிரவு (08) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
புத்தூரிலிருந்து - சுண்ணாகம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த ஹயஸ் ரக வாகனம் பலாலியிலிருந்து ஏழாலை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 60 வயதான சங்கரப்பிள்ளை ஜெய்சங்கர் என்பவர் உயிரிழந்துள்ளார்.
தலைமறைவான சாரதி
இந்தநிலையில் விபத்தை ஏற்படுத்திய வாகன சாரதி தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்து சம்பவம் தொடர்பில் சுன்னாகம் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை யாழ்ப்பாணம் - வடமராட்சி பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் 21 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி