தமிழர் தேசத்தை சிதைத்தழிக்கும் சிங்கள தேசத்துக்கு எதிராக யாழில் மாபெரும் போராட்டம்!

Jaffna Sri Lanka SL Protest
By Kalaimathy Apr 01, 2023 06:34 AM GMT
Report

தமிழர் தேசத்தை சிதைத்தழிக்கும் சிங்கள தேசத்துக்கு எதிராக யாழில் மாபெரும் கண்டனப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தலைமையில் யாழ்ப்பாணம் சங்கானைச் சந்தியில் இன்று காலை 9.30 மணியளவில் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த போராட்டத்தின் போது, வெடுக்குநாறி மலை எங்கள் சொத்து, கிண்ணியா எங்கள் சொத்து, நெடுந்தீவு எங்கள் சொத்து, கச்சதீவு எங்கள் சொத்து, அழிக்காதே அழிக்காதே தமிழினத்தை அழிக்காதே, தொல்லியல் திணைக்களமே வெளியேறு, வெளியேறு வெளியேறு படைகளே வெளியேறு, எங்கே எங்கே உறவுகள் எங்கே, தமிழர்களின் தீர்வு சுயாட்சியே, எடுப்பது பிச்சை அறுப்பது எங்களின் கழுத்தையா உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை தாங்கியவாறும் கோசங்களை எழுப்பியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாரிய போராட்டம்

தமிழர் தேசத்தை சிதைத்தழிக்கும் சிங்கள தேசத்துக்கு எதிராக யாழில் மாபெரும் போராட்டம்! | Jaffna Chankanai Protest Kachchatheevu Vedukunari

இப்போராட்டத்தில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் கருத்துத் தெரிவிக்கையில்,

குருதி சிந்திய போர் முடிவுக்கு வந்தாலும் இந்தத் தீவிலிருந்து தமிழர்களை துடைத்தெறியாமல் சிங்கள தேசம் ஓயாது. அது தனது கோரப்பற்களை இன்னமும் திறந்தே வைத்திருக்கின்றது.

அதிகரித்துள்ள இனவழிப்பு

தமிழர் தேசத்தை சிதைத்தழிக்கும் சிங்கள தேசத்துக்கு எதிராக யாழில் மாபெரும் போராட்டம்! | Jaffna Chankanai Protest Kachchatheevu Vedukunari

ஓர் இனத்தை அழிக்க வேண்டுமாயின் அதன் கலாசாரம், நிலம், பண்பாடு மீது கைவைக்க வேண்டும். அதனடிப்படையிலேயே பௌத்த சிங்களப் பேரினவாதம் அண்மைக் காலமாக தமிழர் தாயகத்துக்கு எதிராக இந்தப் போரைத் தீவிரப்படுத்தியிருக்கின்றது.

எமது இனவழிப்பை தடுத்து நிறுத்துவதற்கு யாரும் முன்வரப்போவதில்லை. பல்லாயிரம் உயிர்கள் முள்ளிவாய்க்காலில் கொன்றொழிக்கப்பட்டபோதே வராத எந்தவொரு தரப்பும் இப்போது மட்டும் வரப்போவதில்லை. எமது மண்ணை எங்களின் இருப்பை பாதுகாக்க வேண்டுமானால் நாம்தான் போராட வேண்டும்.

வெடுக்குநாறியில் ஆதிலிங்கேஸ்வரரை அடித்துடைத்திருக்கிறார்கள், கின்னியா வெந்நீர் ஊற்றை ஆக்கிரமித்திருக்கிறார்கள், குருந்தூர் மலையில் விகாரையை கட்டி மகிழ்கிறார்கள், கச்சதீவில் புத்தனை குடியேற்றுகிறார்கள்.

தமிழர் தாயக ஆக்கிரமிப்பு

தமிழர் தேசத்தை சிதைத்தழிக்கும் சிங்கள தேசத்துக்கு எதிராக யாழில் மாபெரும் போராட்டம்! | Jaffna Chankanai Protest Kachchatheevu Vedukunari

இந்தப் பட்டியல் கடந்த ஒரு மாதத்தில் அரங்கேறிய புத்தனின் சீடர்களின் அட்டூழியங்கள் மட்டுமே. இது இத்துடன் முடியப்போவதில்லை. எதிர்ப்புக்கள் பலமானால் மாத்திரமே அவர்களின் ஆக்கிரமிப்புக்கள் மெல்ல அடங்கும்.

அவர்களின் மொழியில் அவர்களுக்குச் சொன்னால் மாத்திரமே புரியும். நாம் அமைதியாக கடக்கும் ஒவ்வொரு நொடியும் எங்களின் தேசத்தை கறையான்போன்று பௌத்த சிங்கள பேரினவாதம் அரித்துக்கொண்டேயிருக்கும்.


விழித்தெழுந்து போராடவேண்டிய நிர்பந்தம் எமக்கு ஏற்பட்டிருக்கின்றது. இனவழிப்பை எதிர்த்து குரல்கொடுக்க ஒவ்வொருவரும் வரவேண்டியதன் அவசியத்தை காலம் உணர்த்திக்கொண்டிருக்கின்றது.

எங்களின் பலவீனம் தான் எதிரியின் பலமாகிறது. நாங்கள் பலமானவர்களாக எங்கள் எதிர்ப்பை பதிவுசெய்ய வேண்டும் எனவுமத் தெரிவித்துள்ளார்.


GalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

கொழும்பு

11 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Scarborough, Canada

11 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வெள்ளவத்தை

12 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கரவெட்டி, Montreal, Canada, திருகோணமலை

12 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

09 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, London, United Kingdom

12 Sep, 2010
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு, London, United Kingdom

13 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்.பாஷையூர், Jaffna, பிரான்ஸ், France

10 Sep, 2010
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Brisbane, Australia, Harrow, United Kingdom

06 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கிளாலி

11 Sep, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016