யாழ்ப்பாணம் -சென்னை விமானசேவை மீண்டும் ஆரம்பம் - வெளியானது அறிவிப்பு
Chennai
Sri Lankan Peoples
Jaffna International Airport
By Sumithiran
2 மாதங்கள் முன்
யாழ்ப்பாணம் பலாலி - சென்னை விமானசேவை எதிர்வரும் 12 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி முதலாவது விமானம் அன்றுகாலை 10.15 மணிக்கு பலாலி விமான நிலையத்தில் வந்திறங்கும்.மீண்டும் பிற்பகல் ஒரு மணிக்கு இங்கிருந்து விமானம் புறப்படும்.
வாரத்துக்கு நான்கு நாட்கள் சேவை
வாரத்துக்கு நான்கு நாட்கள் இந்தச் சேவை நடைபெறும் என வடக்கு மாகாண சுற்றுலா பணியகத்தின் தலைவர் சுனிஸ் திஸநாயக்க நேற்றையதினம் அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
விமான சேவை மீள ஆரம்பிக்கப்படுவது தொடர்பில் வடக்கு மாகாணத்தின் சுற்றுலா பணியகத்தின் அதிகாரிகள் யாழ்ப்பாணம் விமான நிலையத்திற்கு சென்று பார்வையிட்டுள்ளனர்.
இந்த விமான சேவைக்கான டிக்கற் வழங்கும் முற்பதிவு இன்று முதல் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


நிலைமாறு கால நீதிச் செயற்பாடுகளை ஏமாற்றும் மற்றுமொரு நடவடிக்கை
2 வாரங்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்