யாழ் - பருத்தித்துறையில் விசமிகள் நாசகார செயல் (படங்கள்)
Jaffna
By Vanan
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை காவல்துறை பிரிவில் நாகர்கோவில் மேற்கு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10 படகுகள் தீக்கிரயாக்கப்பட்டுள்ளது.
கடலட்டை தொழிலில் ஈடுபட்டு வந்த படகுகள் தற்போது தொழிலில் ஈடுபடாமல் நீண்ட காலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சமயம் நேற்று அதிகாலை 2 மணியளவில் தீயிடப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
புத்தளம், தில்லையடி, அல்ஜித்தா எனும் முகவரியில் வசிக்கும் சாகுல் ஹமீது ஜௌபர் என்பவருக்குச் சொந்தமான படகுகளே இவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான காரணம், சந்தேக நபர்களோ இதுவரை அறியப்படவில்லை.
இது தொடர்பாக பருத்தித்துறை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

4ம் ஆண்டு நினைவஞ்சலி