போராட்டக் களத்தில் காவல்துறையின் மிலேச்சத்தனம் - பெண் உள்ளிட்ட ஐவருக்கு ஏற்பட்ட நிலை!
யாழ்ப்பாணம் தையிட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள விகாரையை அகற்றுமாறு கோரி தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் பெண் உள்ளிட்ட ஐவர் பலாலி காவல்துறையினரால் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர் இதன் காரணமாக குறித்த பகுதியில் சற்று பதற்ற நிலை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட சிலரை பார்க்க சென்றவர்களே கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆனால் அவர்கள் கைது செய்யப்பட்டமைக்கான காரணம் இதுவரை காவல்துறை தரப்பில் இருந்து தெரிவிக்கப்படவில்லை.
சட்டத்திற்கு புறம்பான கைது
விகாரைக்கு முன்பாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், நேற்று இரவு முதல் குறித்த பகுதிக்குள் வெளியாட்கள் எவரும் செல்ல முடியாதவாறு காவல்துறையினர் தடைகளை ஏற்படுத்தி இருந்தனர்.
இந்நிலையிலேயே எவ்வித குற்றச்சாட்டுக்களும் இன்றி பெண் உள்ளிட்ட ஐவர் பலாலி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
