காவல்துறையால் ஒடுக்கப்படும் அடிப்படை உரிமை - தையிட்டிப் போராட்டக் களத்தில் சுமந்திரன் மாவை!
வலி வடக்கில் உள்ள காணிகளை விடுவிக்குமாறும், தையிட்டிப் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பௌத்த விகாரையை அகற்றக் கோரியும் நேற்று முதல் தொடர் போராட்டம் இடம்பெற்று வருகின்றது.
இந்த தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட மக்களை, இன்று நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா ஆகியோர் நேரில் சென்று கலந்துரையாடினர்.
போராட்டக்களத்தில் சுமந்திரன், மவை
இதன் போது சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள விகாரையையும் எம்.ஏ. சுமந்திரன் மற்றும் மாவை சேனாதிராஜா ஆகியோர் பார்வையிட்டனர்.
அத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தங்களுக்கு தேவையான அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவதாகவும் மருந்து உணவுப்பொருட்கள் என்பவற்றை உள்ளே கொண்டு வருவதற்கு காவல்துறையினர் அனுமதி வழங்கவில்லை என்றும் போராட்டக்களத்தில் இருப்பவர்களால் சுட்டிக்காட்டப்பட்டது.




