யாழ். நகரில் இன்று இரவு இடம்பெற்ற வாள்வெட்டு -இருவர் படுகாயம்
Jaffna
Sri Lanka
Sri Lanka Police Investigation
Crime
By Sumithiran
யாழ்.நகர் காங்கேசன்துறை (கே.கே.எஸ்) வீதி சிவன் கோவிலுக்கு அருகில் அமைந்துள்ள பழக்கடை நடத்துவோர் மீது இனம்தெரியாத குழு ஒன்று வாள்வெட்டு தாக்குதலை நடத்தியுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவம் இன்று (25.05.2023) இரவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இருவர் படுகாயம்
இந்த தாக்குதலில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்த இருவரும் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


புத்திர சோகத்தில் ஈழ அன்னையர்கள்... இன்று அன்னையர் தினம்… 12 மணி நேரம் முன்

உலகமெங்கும் உழைப்பால் தடம் பதிக்கும் ஈழத் தமிழர்கள்
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்