சிறிலங்கா இராணுவ படைக்கு புதிய பிரதானி
Sri Lanka Army
Sri Lanka
By Vanan
இராணுவ படைகளின் 60 ஆவது பிரதானி
சிறிலங்கா இராணுவ படைகளின் 60 ஆவது பிரதானியாக மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு நாளை (8) கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.
இன்று (7) பிற்பகல் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகேவிடமிருந்து அவர் தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார்.
இவர், 2021 டிசம்பர் 12 இல் சிறிலங்கா இராணுவ படைகளின் பிரதிப் பிரதானியாக கடமைகளைப் பொறுப்பேற்றார்.
அதற்கு முன்னதாக, அவர் யாழ்ப்பாணப் பாதுகாப்பு கட்டளைப் பிரிவின் தளபதியாகவும், அதற்கு முன்னர் பல முக்கிய பதவிகளையும் வகித்துள்ளார்.
மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு இலங்கை காலாட்படைப் பிரிவின் தளபதியாகவும் உள்ளார்.


அநுர அரசாங்கத்தின் அமெரிக்க கனவு
5 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி