சர்ச்சைக்குரிய மதபோதகர் : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!
சர்ச்சைக்குரிய போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு (Jerome Fernando) விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத்தடையை கோட்டை நீதவான் நீதிமன்றம் நீக்கியுள்ளது.
அவுஸ்திரேலியா (Australia), சிங்கப்பூர் (Singapore) உள்ளிட்ட 3 நாடுகளில் நடைபெறவுள்ள மத சொற்பொழிவுகளில் பங்கேற்பதற்காக வெளிநாட்டு பயணத்தை மேற்கொள்வதற்கு அனுமதி கோரப்பட்ட நிலையிலேயே, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பிணையில் விடுதலை
இலங்கையில் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் கருத்து வெளியிட்ட குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த போதகர் ஜெரோம் பெர்னாண்டோ கடந்த ஜனவரி மாதம் 3 ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டார்.
எனினும், பிணையில் விடுவிக்கப்பட்ட அவருக்கு எதிராக நீதிமன்றம் பயணத்தடையை விதித்தது.
வெளிநாட்டு பயணத்தடை
இந்த நிலையில், அவுஸ்திரேலியா, சிங்கப்பூர் உள்ளிட்ட 3 நாடுகளில் நடைபெறவுள்ள மத சொற்பொழிவுகளில் பங்கேற்பதற்காக வெளிநாட்டு பயணத்தை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்குமாறு ஜெரோம் பெர்னாண்டோ சார்பில் நீதிமன்றில் முன்னிலையான சட்டத்தரணிகள் கோரியுள்ளனர்.
இந்த கோரிக்கையை பரிசீலித்த கோட்டை நீதவான், அவரது வெளிநாட்டு பயணத்தடையை தற்காலிகமாக நீக்கி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதன்படி, ஜெரோம் பெர்னாண்டோவுக்கு எதிர்வரும் ஜூன் மாதம் 26 ஆம் திகதி வரை பயணத்தடையை தற்காலிகமாக நீக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |