வியாழனின் உபகோள் யூரோபாவில் குறைவடைந்த ஒக்சிஜன் உற்பத்தி!
வியாழன் கோளின் சந்திரனான யூரோபாவில் கணித்ததை விட மிகக் குறைவான அளவில் ஒக்சிஜன் உற்பத்தி செய்யப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பூமியை தாண்டி மனிதன் வாழ்வதற்கு உகந்த கிரகத்தை கண்டு பிடிக்கும் முயற்சியில் பல்வேறு ஆய்வுகள் முன்னெடுக்கப்படுகின்ற நிலையில் அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவின் ஜூனோ விண்கலம் வியாழன் கோளில் ஆய்வுகளை முன்னெடுத்து வருகிறது.
ஜூனோ என்பது ஜூலை 2016 முதல் வியாழனை ஆய்வு செய்து வரும் ஒரு விண்கலமாகும் இது யூரோபாவின் வளிமண்டலத்தில் இருந்து வரும் ஒக்சிஜன் மற்றும் ஐதரசன் மூலக்கூறுகள் காணப்படுவதை கண்டுபிடித்து ஆய்வுகளை முன்னெடுத்து வந்தது.
ஒக்சிஜனின் அளவு
இந்த மூலக்கூறுகளின் அளவை அளவிட்டபோது யூரோபாவில் 24 மணி நேரத்திற்கு சுமார் 1,000 தொன் ஒக்சிஜனை உற்பத்தி செய்வதாக கண்டறியப்பட்டுள்ளது.
இந்த ஒக்சிஜனின் அளவானது சுமார் ஒரு மில்லியன் மனிதர்களை ஒரு நாளைக்கு சுவாசிக்க வைக்க உதவும் எனவும் ஆய்வாளர்களால் கூறப்படுகிறது.
இந்நிலையில் யூரோபாவில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் முன்னர் அங்கு உற்பத்தி செய்யப்படும் ஒக்சிஜனின் அளவானது முன்னர் கணிக்கப்பட்ட ஒக்சிஜனின் அளவை விட கணிசமான அளவு குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.
மேலதிக ஆய்வுகள்
மேலும் நாசாவின் ஆய்வுகள் யூரோபாவின் மேற்பரப்பில் ஒரு தடித்த பனி அடுக்கு காணப்படுவதாகவும் அதற்கு அடியில் ஒரு கடல் இருப்பதாகவும் பரிந்துரைத்துள்ளது, நிலவின் கடலில் பூமியின் பெருங்கடல்களை விட இரண்டு மடங்கு தண்ணீர் இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் மதிப்பிடுகின்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மனிதனின் உயிர்வாழ்வுக்கு ஒக்சிஜனுடன், நீரும் தேவைப்படுவதால், மனித வாழ்க்கைக்கு யூரோபா பொருத்தமானதா என்ற மேலதிக ஆய்வுகளையும் தேவையான தரவுகளையும் சேகரிக்க நாசா தீர்மானித்துள்ளது.
இதனால் ஜூனோ விண்கலத்தின் ஆய்வுகளை அதிகரிக்கவும், யூரோபாவை மேலும் உன்னிப்பாக ஆய்வு செய்யவும் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |