செந்தில் தொண்டமான் குறித்து லண்டன் தமிழர்கள் மத்தியில் அண்ணாமலை கருத்து!
K. Annamalai
Senthil Thondaman
Eastern Province
By Pakirathan
கிழக்கு மாகாண ஆளுநராக செந்தில் தொண்டமான் நியமிக்கப்பட்டமை தொடர்பில் தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை கருத்து வெளியிட்டுள்ளார்.
அந்தவகையில், கிழக்கு மாகாண புதிய ஆளுநராக செந்தில் தொண்டமான் நியமிக்கப்பட்டது தமிழ் மக்களின் பெரும்பாலான முக்கிய பிரச்சனைகளை தீா்க்கும் என்ற நம்பிக்கையை உருவாக்கியுள்ளதாக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை உரை
பிரிட்டன் நாடாளுமன்றத்தில் உள்ள ஹவுஸ் ஆஃப் லாா்ட்ஸ் அரங்கத்தில், பிரிட்டன் தமிழ்ச் சங்கம், சங்கமம் யுகே ஆகியவை சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய அவா் இவ்வாறு கூறியுள்ளார்.
