தமிழர் தலைநகரிலுள்ள வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி
திருகோணமலை(trincimale) கந்தளாய் வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை நிபுணர் இன்மையால் முக்கியமான சத்திரசிகிச்சை சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கந்தளாய் வைத்தியசாலையில் விசேட வைத்திய நிபுணர் இல்லாத காரணத்தால் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை தொடர்பில் குறித்த வைத்தியசாலையின் மேற்பார்வையாளர் வைத்தியர் பி.என். எதிரிசிங்க சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு அவசர கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.
முன்னறிவித்தலின்றி விசேட வைத்திய நிபுணர் விடுமுறை
அந்த கடிதத்தில், தற்போதைய விசேட சத்திரசிகிச்சை நிபுணர் எவ்வித முன்னறிவித்தலுமின்றி சுகவீன விடுப்பில் உள்ளார். இதனால் சத்திரசிகிச்சை முற்றாக செயலிழந்துள்ளது.இதனால் ஆபத்தான நோயாளிகள் திருகோணமலையில் உள்ள மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.
மேலும், அமைச்சு தற்காலிக நடவடிக்கையாக பொது சத்திரசிகிச்சை நிபுணரான டொக்டர் சிவமயூரனை நியமித்துள்ள நிலையில், இது ஒரு தற்காலிக தீர்வு மட்டுமே என வைத்திய அத்தியட்சகர் வலியுறுத்தி உள்ளார்.
நெருக்கடியில் வைத்தியசாலை
வைத்தியசாலைக்கு நியமிக்கப்பட்ட நிரந்தர சத்திரசிகிச்சை நிபுணர் இன்னும் தான் விடுமுறையில் உள்ளதை அறிக்கை செய்யவில்லை, இதனால் அத்தியாவசிய மருத்துவ சேவைகளை வழங்குவதற்கான வைத்தியசாலையின் திறனில் இடைவெளியை ஏற்படுத்தியுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை அவரின் இந்த கோரிக்கைக்கு சுகாதார அமைச்சகம் இன்னும் பதிலளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |