கரூர் சம்பவத்தின் எதிரொலி : விஜய்யின் மக்கள் சந்திப்பு குறித்து வெளியான அறிவிப்பு
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் மக்கள் பிரசாரம் அடுத்த 2 வாரங்களுக்கு தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக தமிழக வெற்றிக் கழகம் அறிவித்துள்ளது.
கடந்த வாரம் கரூரில் இடம்பெற்ற தவெக தலைவர் விஜய்யின் பிரசாரத்தில் ஏற்பட்ட சன நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிலையிலேயே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் வேலூர், ராணிப்பேட்டை மற்றும் பாண்டிச்சேரி, கடலூரில் நடைபெற இருந்த விஜய்யின் மக்கள் சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெளியான அறிவிப்பு
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை நிலையச் செயலகம் எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்ட பதிவில், “நம் சொந்தங்களை இழந்த வேதனையிலும் வருத்தத்திலும் நாம் இருக்கும் இச்சூழலில், நம் கழகத் தலைவர் அவர்களின் அடுத்த இரண்டு வாரங்களுக்கான மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியானது தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது.
தலைமை நிலையச் செயலக அறிவிப்பு
— TVK Party HQ (@TVKPartyHQ) October 1, 2025
கழகத் தோழர்களுக்கு வணக்கம்.
நம் சொந்தங்களை இழந்த வேதனையிலும் வருத்தத்திலும் நாம் இருக்கும் இச்சூழலில், நம் கழகத் தலைவர் அவர்களின் அடுத்த இரண்டு வாரங்களுக்கான மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியானது தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது. இந்த மக்கள் சந்திப்பு…
இந்த மக்கள் சந்திப்பு தொடர்பான புதிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்பதை நம் கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு தெரிவித்துக்கொள்கிறோம்.” என குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
