கனடாவில் கைதான விமானப் பணிப்பெண்: வெளியான காரணம்
Pakistan
Toronto
Canada
By Dilakshan
பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் விமானப் பணிப்பெண் ஒருவர் கனடாவின் ரொறொன்ரோவில் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாகிஸ்தான் விமானத்தில் இருந்து வந்த ஹினா சானி என்ற விமானப் பணிப்பெண்ணின் பயணப்பொதியில் பல்வேறு நபர்களின் கடவுச்சீட்டுகள் இருந்ததைக் கண்டு ரொறன்ரோவில் குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்தோடு, பாகிஸ்தான் ஏர்லைன்ஸின் செய்தித் தொடர்பாளர் அவர் கைது செய்யப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளார்.
விமானப் பணிப்பெண்கள்
மேலும், கைது செய்யப்பட்ட பெண் பாகிஸ்தானில் உள்ள பிரபல இசைக்கலைஞரின் குடும்ப உறுப்பினர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, அவருடன் இருந்த மேலும் இரு விமானப் பணிப்பெண்கள் காவல்துறையினர் விசாரணைக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்