48 பிரதேச செயலக பிரிவுகளுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கை!
மழையுடனான காலநிலை தொடர்ந்து வரும் நிலையில் 11 மாவட்டங்களில் உள்ள 48 பிரதேச செயலகங்கப் பிரிவுகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
அவற்றில், பதுளை மாவட்டத்தின் ஹாலி எல, களுத்துறை மாவட்டத்தின் இங்கிரிய, பாலிந்த நுவர, கண்டி மாவட்டத்தின் யட்டிநுவர, தும்பனை மற்றும் பஸ்பாகே, கேகாலை மாவட்டத்தில் தெஹியோவிட்ட, மாத்தறை மாவட்டத்தின் அத்துரலிய, பஸ்கொட மற்றும் கிரியெல்ல ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு இரண்டாம் கட்ட எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
மண்சரிவு எச்சரிக்கை
தவிரவும், இரத்தினபுரி மாவட்டத்தில் நிவிதிகல, இம்புல்பே, கலவான மற்றும் பலாங்கொட ஆகிய இடங்களுக்கும் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நிலைமை சீராகும் வரை பொதுமக்களை அவதானமாக இருக்கும் வண்ணமும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.