தியகல - நோட்டன் வீதியில் மண்சரிவு - பொது போக்குவரத்து முற்றாக தடை
நோட்டன் தியகல பிரதான வீதியில் தியகல பகுதியில் இருந்து சுமார் ஒன்றரை கிலோமீற்றர் தொலைவில் மண்சரிவு ஏற்பட்டு பொது போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.
நேற்று(27) காலை நோட்டன் பகுதியில் பெய்து வந்த தொடர் மழையின் காரணமாகவே மேற்படி அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
அத்துடன், அனர்த்தம் ஏற்பட்ட இடங்களிலுள்ள மண் மற்றும் கற்களை அகற்றுவதற்கு வீதி போக்குவரத்து அதிகார சபையின் ஊழியர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
தொடர் மழை
தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதோடு, நடை பாதை வர்த்தகமும் பாதிக்கப்பட்டுள்ளதாக நடைபாதை வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து நுவரெலியா மாவட்டத்தில் பல பிரதேசங்களுக்கு மழை பெய்து வருவதனால் பல இடங்களில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளன.
இதனால் மண் மேடுகளுக்கும் மலைகளுக்கும் சமீபமாக வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு இடர் முகாமைத்து மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
