நண்பனுக்கு பொருள் வாங்க கடைக்கு சென்றவருக்கு அடித்த அதிர்ஷ்டம்..!
பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த ட்ரோய் மாவுல்டிங் என்ற நபர் கடந்த 6 ம் திகதி நடைபெற்ற லொட்டோ லொத்தர் சீட்டிலுப்பில் ஆறு மில்லியன் டொலர்கள் பணத்தை வென்றுள்ளார்.
அலுவலக கூட்டம் ஒன்றிற்காக பிரிட்டிஷ் கொலம்பியாவில் இருந்து றொரன்டோ சென்ற போது குறித்த நபர் லொத்தர் சீட்டு கொள்வனவு செய்துள்ளார்.
நண்பருக்கு பேன்டேஜ் கொள்வனவு செய்ய சென்ற போது
நண்பர் ஒருவருக்கு பேன்டேஜ் கொள்வனவு செய்வதற்காக கடைக்குச் சென்ற போது குறித்த லொத்தர் சீட்டுக்களை அவர் கொள்வைனவு செய்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், " நான் வழமையாக தெரிவு செய்யும் இலக்கங்களுக்கு பரிசுத் தொகை கிடைப்பதில்லை. விடுதியில் தனிமையில் இருந்த போது வெற்றி இலக்கங்களை பரீட்சித்து பார்த்த்தேன் , வெற்றி இலக்கங்களை இரண்டு தடவைகள் பார்த்து உறுதி செய்து கொண்டேன்.
டிக்கட் இலக்கங்களை எனது மனைவி மற்றும் எனது சகோதரிக்கு அனுப்பி வைத்து இலக்கங்களை நான் மீண்டும் சரிபார்த்துக் கொண்டேன் மகிழ்ச்சியில் என் கண்கள் கலங்கி விட்டன" எனக் குறிப்பிட்டார்.

