நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கி சூடு..! சட்டத்தரணி ஒருவரினால் பரபரப்பு
பாணந்துறையில் நேற்று இரவு துப்பாக்கி சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பாணந்துறை தெற்கு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு அளுத்கடை நீதிமன்றத்தில் பணிபுரியும் சட்டத்தரணி ஒருவரினால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும், துப்பாக்கிச் சூட்டில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
சந்தேக நபரான சட்டத்தரணியும் அவருடன் வந்த இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட 9எம்எம் கைத்துப்பாக்கி மற்றும் அவர்கள் வந்த சொகுசு ஜீப் வாகனம் என்பனவும் காவல்துறையினரின் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளது.
சட்டதரணியின் கைத்துப்பாக்கிக்கு உரிமம்
சட்டதரணியின் கைத்துப்பாக்கிக்கு உரிமம் இருந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூடு நடத்திய சட்டத்தரணியின் தோழி ஒருவர் பாணந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கடன் கொடுத்துள்ளார்.
அதனைத் திருப்பிச் செலுத்தாததால், கடனைக் கொடுத்த பெண் கடனாளியின் வீட்டிற்கு வந்துள்ளார்.
இரு குழுக்களுக்கிடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளதாகவும், சட்டத்தரணியை தாக்குவதற்கு எதிரணியினர் தயாரான நிலையில் 9MM ரக துப்பாக்கியால் வானத்தை நோக்கி சட்டத்தரணி துப்பாக்கி சூடு நடத்தியதாக விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
வழக்கறிஞரின் சொகுசு ஜீப்பும் சேதப்படுத்தப்பட்டது. பாணந்துறை குற்றத்தடுப்பு ஆய்வக அதிகாரிகளும் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இன்று பாணந்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.


இதபோல் ஒருநாளில் தான் கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டார்! 4 நாட்கள் முன்
