முகநூல் மூலம் மது விற்பனை விளம்பரம் : முன்னணி மதுபானக் கடை உரிமையாளருக்கு ஏற்பட்ட நிலை
தேசிய புகையிலை மற்றும் மதுபானம் ஆணைய(NATA) சட்டத்தை மீறி கவர்ச்சிகரமான தள்ளுபடிகளை அறிவித்து முகநூல்(facebook) ஊடாக மது விற்பனையை ஊக்குவித்ததற்காக முன்னணி மதுபான கடை மற்றும் றோட்டல் உரிமையாளர் ஒருவர் மீது கலால் துறையால் வழக்குப் பதிவு செய்யப்பட்டது
அத்துடன் வரி செலுத்தாமல் வைத்திருந்த ஏராளமான வெளிநாட்டு மதுபானங்களையும் கலால் துறை பறிமுதல் செய்ததாக கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
விலையுயர்ந்த வெளிநாட்டு மதுபானங்களும் மீட்பு
சமூக ஊடக தளம் மூலம் விளம்பரம் மேற்கொண்டு மதுபான விற்பனை இடம்பெறுவதாக வந்த தகவலைத் தொடர்ந்து, பொரளையில் உள்ள ஒரு பிரபலமான மதுக் கடையில் சோதனை நடத்தி, ரூ.3 மில்லியனுக்கும் (3,000,000) அதிக மதிப்புள்ள விலையுயர்ந்த விஸ்கி, பிராந்தி மற்றும் வோட்கா உள்ளிட்ட பல்வேறு வகையான வெளிநாட்டு மதுபானங்களின் 128 போத்தல்களை பறிமுதல் செய்ததாக கலால் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
எந்த மதுபான போத்தல்களிலும் வரி செலுத்துவதற்கான கலால் பாதுகாப்பு ஸ்டிக்கர் ஒட்டப்படவில்லை என்றும், உரிமையாளர் நாட்டில் உரிமம் பெற்ற வெளிநாட்டு மதுபான விற்பனை முகவர்களிடமிருந்து இவற்றை வாங்கவில்லை என்றும், நேர்மையற்ற வழிகளில் வாங்கியுள்ளார் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
தண்டனைக்குரிய குற்றம்
இது தொடர்பாக கலால் திணைக்கள மூத்த அதிகாரி தெரிவிக்கையில், எந்தவொரு ஊடகம் அல்லது சமூக ஊடகங்கள் மூலமாகவும் மதுபானம் அல்லது அதன் விற்பனையை ஊக்குவிப்பது தேசிய புகையிலை மற்றும் மதுபானம் ஆணையச் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும் என்று கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
