வவுனியாவில் ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் 1000 பேருக்கு எரிவாயு விநியோகம்
எரிவாயு விநியோகம்
வவுனியாவில் இன்று காவல்துறையினரின் உதவியுடன் லிட்ரோ எரிவாயு கொள்கலன்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது.
வவுனியா, மூன்று முறிப்பு பகுதியில் உள்ள மைதானத்தில் வைத்து காவல்துறை மற்றும் லிட்ரோ நிறுவனத்தினர் இணைந்து குறித்த எரிவாயு கொள்கலன்களை வழங்கி வைத்தனர்.
இலக்கச்சீட்டுக்கள் வழங்கப்பட்டதற்கிணங்க பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் மின்சார பட்டியல்கள் பதிவு செய்யப்பட்டு எரிவாயு கொள்கலன்கள் வழங்கிவைக்கப்பட்டது.
இடைநிறுத்தப்பட்டிருந்த எரிவாயு விநியோகம்
நாட்டில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் கடந்த சில காலமாக லிட்ரோ நிறுவனம் தமது விநியோகத்தை இடைநிறுத்தியிருந்தது.
எனினும் ஒரு மாத காலத்திற்கு பின்னர் இன்று வவுனியாவில் 1000 பேருக்கு சீரான முறையில் லிட்ரோ சமையல் எரிவாயு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதுவே வவுனியாவில் ஒரு மாதத்திற்கு பின்னர் எவ்வித குழப்பமும் இன்றி எரிவாயு வழங்கப்பட்ட சந்தர்ப்பமாகும்.
