விநியோகம் தொடர்பில் லிட்ரோ நிறுவனத்தின் விசேட அறிவிப்பு!!
உள்நாட்டு எரிவாயு சிலிண்டர் விநியோகம் நாளை (31) பிற்பகல் ஆரம்பிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன்படி, 50,000 சமையல் எரிவாயு கொள்கலன்கள் நாளை சந்தைக்கு விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விநியோகத்தில் 12.5 கிலோ, 5 கிலோ மற்றும் 2.3 கிலோ வீட்டு எரிவாயு சிலிண்டர்கள் அடங்கும்.
லிட்ரோ நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் லிட்ரோ சிலிண்டர்களை விநியோகிக்கும் விநியோகஸ்தர்களின் தகவல்களை நுகர்வோர் பெற்றுக்கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
லிட்ரோ நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்
மே 24 முதல் விநியோகம் இடைநிறுத்தம்
இதேவேளை, லிட்ரோ நிறுவனம் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை கடந்த மே 24 முதல் இன்று வரை இடைநிறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
3500 மெட்ரிக் தொன் எரிவாயு தங்கிய கப்பல் வருவதில் தாமதம் ஏற்பட்டதே இதற்குக் காரணம் எனவும் அறிவிக்கப்பட்டது.
எவ்வாறாயினும், 3,500 மெட்ரிக் டன் எரிவாயு தாங்கிய கப்பல் இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
இதனையடுத்தே 50,000 சமையல் எரிவாயு கொள்கலன்கள் நாளை முதல் சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுத்ததாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
