சடுதியாக விலை குறையும் லிட்ரோ எரிவாயு - நாட்டு மக்களுக்கு வெளியாகிய அறிவித்தல்
2023 ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் லிட்ரோ எரிவாயு விலை குறைக்கப்படும் என லிட்ரோ நிறுவனத் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.
உலக சந்தையில் ஏற்படும் விலை மாற்றங்களுக்கு ஏற்ப இவ்வாறு லிட்ரோ எரிவாயுவின் விலை குறைக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, கடந்த இரு தினங்களுக்கு முன்னர் எரிவாயுவின் விலையை லிட்ரோ நிறுவனம் அதிகரித்திருந்தது. இதன்படி, 12.5 கிலோ கிராம் எடைகொண்ட சமையல் எரிவாயுவின் விலை 250 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டது.
விலை அதிகரிப்பிற்கமைய
அத்துடன், 5 கிலோ கிராம் சமையல் எரிவாயுவின் விலை 100 ரூபாவினாலும், 2.3 கிலோ கிராம் எடைகொண்ட சமையல் எரிவாயுவின் விலை 45 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டது.
விலை அதிகரிப்பிற்கமைய, 12.5 கிலோ கிராம் எடைகொண்ட சமையல் எரிவாயுவின் புதிய விலை 4610 ரூபாவாகவும் 5 கிலோ கிராம் எடைகொண்ட சமையல் எரிவாயு கொள்கலனின் புதிய விலை 1850 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டது.
மேலும், புதிய விலை திருத்தத்திற்கு அமைய 2.3 கிலோ கிராம் எடைகொண்ட சமையல் எரிவாயு கொள்கலனின் புதிய விலை 860 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.
