லிட்ரோ எரிவாயு விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு!
இம்மாதத்திற்கான லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.
லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார்.
இதேவேளை, உலக சந்தை விலைகளுக்கு ஏற்ப நாட்டின் எரிவாயு விலையை திருத்துவதற்கான ஒப்புதல் பெறுவதற்காக பரிந்துரைகளை லிட்ரோ நிறுவனம் நிதியமைச்சிடம் சமர்ப்பித்துள்ளதாக தெரிவித்திருந்தது.
எரிவாயு விலை திருத்தம்
அதன்போது, எரிவாயு விலை திருத்தம் தொடர்பான பரிந்துரைகள் இந்த மாதத்தின் முதல் வாரத்தில் நிதி அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக நேற்றைய தினம் (10.20.2025) சமர்ப்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
எனினும், இதுவரையிலும் எரிவாயு விலை திருத்தத்திற்கான ஒப்புதல் கிடைக்கவில்லை என லிட்ரோ நிறுவனம் நேற்று அறிவித்திருந்தது.
இவ்வாறனதொரு பின்னணியில் இம்மாதத்திற்கான லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)