லண்டனில் திறந்துவைக்கப்பட்ட ஈலிங் ஸ்ரீ கனகதுர்க்கையம்மன் ஆலய தியானமண்டபம்
லண்டன் ஈலிங் ஸ்ரீ கனகதுர்க்கையம்மன் ஆலய தியானமண்டபம் 19-03-2023 ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12மணிக்கு திறந்துவைக்கப்பட்டது
குறித்த தியானமண்டபமானது ஆலய நிர்வாகசபை முன்னாள் தலைவரும் தற்போதைய செயலாளருமான திரு சொக்கலிங்கம் கருணைலிங்கம், அறங்காவலர் சபைத்தலைவர் திரு தேவராஜன் தலைமையில் ஈலிங் நகரபிதா மொகிந்தர் மிதா (mohinthar mitha) வைபவரீதியாக திறந்து வைத்தார் .
இந்நிகழ்வில் பிரித்தானிய உள்ளூராட்சி சபை நகரபிதாக்கள், சபை உறுப்பினர்களான
1. Mayor of Ealing Mohinder Mitha,
2. Mayor of Redbridge Thavaranjan Jeyaranjan,
3. Dr Lilly Gunasekar from High Commission of India,
4. Deputy Mayor of Ealing Hitesh Taylor,
5. Deputy Mayor of Barnet Nagus Narenthira,
6. Former Mayor of Harrow Suresh Krishna,
7. Former Mayor of Brent Kana Naheerathan,
8. Former Deputy Mayor of Harrow Sasikala Suresh,
9. Councillor Tariq Mahamood,
10. Councillor Param Nanda,
11. Councillor Rajan Seelan,
12. Councillor Kumar Sahadevan,
13. Councillor Kamala Kuhan,
14. Councillor Thaya Iddaikader,
15. Councillor Jay Ganesh,
16. Councillor Allan, ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து சிறப்பித்தனர்
அன்னையர்கள் கௌரவிப்பு
அறங்காவலர்சபை செயலாளர் Dr பரமநாதன் சிறப்புரையுடன் ஆரம்பித்த இந்நிகழ்வில் நிர்வாகசபைத்தலைவர் யோகநாதன் விருந்தினர்களாக அறங்காவலர் திரு சிறீரங்கன் நிர்வாகசபைபொருளாளர் திரு இரகுநாதன் சட்டத்தரணி திரு கிருஷ்ணராஜா வைத்தியர் மயூரன் ஆகியோரின் சிறப்புரைகளுடனும் பெருமளவான அடியவர்கள் மதியம் முதல் மாலைவரை நடைபெற்ற நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில்
அன்னையர் தினத்தையொட்டி அன்னையர்கள் கௌரவிப்பும் மிகச்சிறப்பாக நிர்வாகசபை உறுப்பினர்களான
திருமதி சாரதாதேவி கணேசராஜா மற்றும் சர்வா ஜெயம் அவர்களின் ஒழுங்கமைப்பில் நடாத்தப்பட்டது.











