தமிழீழ விடுதலைப்புலிகள் அடைவதற்கு முயற்சித்த இலக்கு - கொந்தளிக்கும் இனவாதி..!
கொழும்பில் வாழ்கின்ற சில தமிழ் அரசியல்வாதிகளே தமிழ் மக்களின் வாக்குகளை பெறுவதற்காக ஈழம் என்ற கோசத்தினை எழுப்புவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
முயற்சித்த இலக்கு
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
"தமிழீழ விடுதலைப்புலிகளால் அடைவதற்கு முயற்சித்த இலக்கினை தமிழ் புலம்பெயர் அமைப்பினர் அடைவதற்கு முயற்சிக்கின்றனர்.
மனித உரிமைகள் என்ற போர்வையில் இலங்கைக்கு எதிராக கூட்டுச் சதியினை தமிழ் புலம்பெயர் அமைப்பினர் முன்னெடுத்து வருகின்றனர்.
தெற்கிலும் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர், ஆனால் கொழும்பில் வாழ்கின்ற சில தமிழ் அரசியல்வாதிகளே தமிழ் மக்களின் வாக்குகளை பெறுவதற்காக ஈழம் என்ற கோசத்தினை எழுப்புகின்றனர்.
கனடாவில் குடித்தொகை குறைந்து வருவதனால் அங்கு சென்றுள்ள தமிழர்கள் அங்கு ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
கடந்த 14 வருடங்களுக்கு முன்பு இந்த நாட்டில் இருந்த பயங்கரவாதத்தை தோற்கடித்துள்ளோம்.
அரசியல் இலாபங்களை அடைவதற்காக அப்பாவி மக்களை படுகொலை செய்வதே பயங்கரவாதம்.
ஆனால் போரை நாங்கள் நியாயப்படுத்த முடியாது, ஆனால் பயங்கரவாதத்தை நியாயப்படுத்தமுடியும்." என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது காலை நேர முக்கிய செய்திகளுடன் இணைந்திருங்கள்.
