மாணவர்களுக்கு மதிய உணவு - கல்வியமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு
Ministry of Education
A D Susil Premajayantha
Sri Lanka
By Sumithiran
வறுமைக் கோட்டிற்குட்பட்ட மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் முறை எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் மீள ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்ப்பதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
பரீட்சைகள், பெறுபேறுகள் வெளியீடு, பாடப் புத்தகங்கள் விநியோகம், பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி வழங்கல் என்பன உரிய நேரத்தில் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய கல்விச் செயலாளராக நிஹால் ரணசிங்க பதவியேற்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
நிதிச் சிக்கல்கள் ஏற்படும் பட்சத்தில் மாணவர்களுக்கு மதிய உணவு இடைநிறுத்தப்படுவதுடன் பிரிவேனா பிரிவின் பணிகளை மீளமைப்பதும் மிகவும் முறையாகவும் துரிதமாகவும் மேற்கொள்ளப்பட வேண்டுமென அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி