மாவீரர் தின நினைவேந்தல்...! அரசின் நிலைப்பாட்டை அறிவித்த NPP அமைச்சர்
மாவீரர்களை நினைவு கூர்வதற்கு தமிழ் மக்களுக்கு முழு சுதந்திரம் உள்ளது என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் (Ramalingam Chandrasekar) தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், “போர்க் காலத்தில் படையினரால் கைப்பற்றப்பட்ட காணிகளை தற்போதைய அரசு விடுவித்து வருகின்றது.
தமிழ் மக்களுக்கு முழு சுதந்திரம்
இதன் தொடர்ச்சியாக மாவீரர் துயிலும் இல்லங்களில் நிலைகொண்டுள்ள இராணுவத்தையும் வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

துயிலும் இல்லங்களில் நிலை கொண்டுள்ள இராணுவத்தை வெளியேற்றுவதற்கு உரிய பொறிமுறைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் பாதுகாப்புச் செயலருக்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
இதற்குரிய நடவடிக்கைகள் விரைவில் இடம்பெறும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மாவீரர்களை நினைவு கூர்வதற்கு தமிழ் மக்களுக்கு முழு சுதந்திரம் உள்ளது. அதை எவரும் மறுத்துரைக்க முடியாது அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |