மகாவம்சத்திற்கு உலக அளவில் கிடைத்த அங்கீகாரம்!
Sri Lanka
By pavan
இலங்கையின் வரலாற்று நூலான மகாவம்சத்தை உலக நினைவக மரபுரிமை ஆவணமாக யுனெஸ்கோ அமைப்பு அறிவித்துள்ளது.
மகாவம்சம் என்பது மஹாநாம தேரரால் பாலி மொழியில் எழுதப்பட்ட ஒரு வரலாற்றுக் கவியமாகும்.
இது கி.மு. 6 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 1815 வரையிலான காலப்பகுதியை உள்ளடக்கியதாக இயற்றப்பட்டுள்ளது.
உலக நினைவக மரபுரிமை
அதன்படி, 2023 ஆம் ஆண்டில் யுனெஸ்கோவால் வெளியிடப்பட்ட உலக நினைவக சர்வதேச ஆவணத்தில், 64 புதிய ஆவண மரபுரிமையில் "மகாவம்சமும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
