சூடு பிடிக்கும் கொழும்பு அரசியல் -ரணிலை திடீரென சந்தித்த மகிந்த
Basil Rajapaksa
Mahinda Rajapaksa
Ranil Wickremesinghe
By Sumithiran
அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையில் இன்று பிற்பகல் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றதாக நம்பகமான வட்டாரங்கள் உறுதிப்படுத்துவதாக கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
இந்த கலந்துரையாடல் இன்று மாலை 5 மணியளவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போதைய அரசியல் நிலவரம்
இக்கலந்துரையாடலின் போது தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து அதிபர் ரணிலுடன் மகிந்த ராஜபக்ச நீண்ட நேரம் கலந்துரையாடியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரணில் - பசில் பேச்சு
இதேவேளை நேற்றையதினம் அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் அமெரிக்காவில் உள்ள பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்சவுக்கும் இடையே தொலைபேசி வாயிலாக கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
