சிறிலங்கா அரசியலில் இருந்து மகிந்தவை விலகுமாறு வலியுறுத்தும் சகா!
Keheliya Rambukwella
Mahinda Rajapaksa
Sri Lanka
Sri Lanka Final War
Sri Lankan political crisis
By Kalaimathy
சிறிலங்காவின் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச இந்த நாட்டுக்குச் செய்ய வேண்டிய சேவை அனைத்தையும் செய்துவிட்டார்.
இனி அவர் அரசியலில் இருந்து ஓய்வெடுக்க வேண்டும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
“மகிந்தவின் தலைமைத்துவம் இல்லை என்றால் இப்போதும் யுத்தம் நடந்துகொண்டிருக்கும். அவர் 80 வயதை நெருங்குகின்றார்.
மகிந்தவுக்கு கௌரவம் கிடைக்க வேண்டும்
அவர் ஓய்வெடுப்பது நல்லது. யாரும் அவரை அவர்களின் அரசியல் தேவைக்காகப் பயன்படுத்தினால் அதற்கு நான் இணங்கமாட்டேன்.
நெல்சன் மண்டேலாவின் மரணத்தின் போது உலகத் தலைவர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். அப்படியொரு கௌரவம் மகிந்தவுக்குக் கிடைக்க வேண்டும்” எனவும் தெரிவித்துள்ளார்.


இதபோல் ஒருநாளில் தான் கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டார்! 4 நாட்கள் முன்

11 மாதங்கள்:அநுர அராங்கம் சொன்னபடிநடந்து கொண்டதா?
6 நாட்கள் முன்
மரண அறிவித்தல்