வெளிநாடு செல்ல விமான நிலையம் சென்ற மஹிந்தானந்த திருப்பி அனுப்பப்பட்டார் - விசாரணை ஆரம்பம்!
Bandaranaike International Airport
Sri Lanka Airport
Mahindananda Aluthgamage
By Pakirathan
வெளிநாடு செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையம் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.
மீண்டும் திருப்பி அனுப்பப்பட்ட விடயம் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினரின் கடவுச்சீட்டு தரவுகளுடன் தொடர்புடைய இன்னுமொருவரின் தரவுகள் உள்ளடக்கப்பட்டமையினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தமக்கு தகவல் வந்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், குறித்த தகவல்களை கணினியில் பதிவேற்றம் செய்த அதிகாரியின் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பான விசாரணைகளை குற்றப் புலனாய்வு திணைக்களம் மற்றும் இலங்கை கணினி அவசர பதில் பிரிவு போன்றவை மேற்கொள்வதாக கூறப்பட்டுள்ளது.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்