ஈஸ்டர் தாக்குதல் விவகாரம்: மைத்திரிக்கு நீதிமன்றம் விடுத்த அதிரடி உத்தரவு
ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் வழங்கிய வாக்குமூலம் தொடர்பில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி வாக்குமூலம் வழங்குமாறு முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேனவிற்கு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டமா அதிபரின் பணிப்புரையின் பேரில், குற்றப் புலனாய்வு திணைக்களம் இன்று நீதிமன்றத்தில் முன்வைத்த முன்மொழிவுகளின் பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி யார் என்பதை தான் அறிந்திருப்பதாக மைத்திரிபால சிறிசேன அண்மையில் தெரிவித்தார்.
நீதிமன்ற உத்தரவு
இந்நிலையில், இந்த விடயம் தொடர்பான வாக்குமூலத்தை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் அவர் கடந்த திங்கட்கிழமை வழங்கியிருந்ததையடுத்து, நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.
அத்தோடு, தமது கட்சித் தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பான விசாரணைகள் தொடர்பில் தவறான செய்திகள் வெளியிடப்பட்டு வருவதாக சிறிலங்கா சுதந்திர கட்சி தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |