இலங்கையில் கைது செய்யப்பட்ட மலேசிய யுவதி
Colombo
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
By Dhilak
கொழும்பு (Colombo) - பெல்லன்வில பகுதியில் மலேசிய யுவதியொருவர் காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
24 வயதுடைய குறித்த யுவதி 3 கிலோ கொக்கெய்ன் போதைப்பொருளுடன் நேற்று (29) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன் மொத்த பெறுமதி 11 கோடி ரூபா என காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
விசாரணை
கங்கொடவில நீதவான் நீதிமன்றில் பெற்றுக்கொள்ளப்பட்ட தடுப்புக்காவல் உத்தரவுகளின் அடிப்படையில் குறித்த பெண்ணிடம் மேலதிக விசாரணைகள் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், சிரேஷ்ட பிரதிப் காவல்துறை மா அதிபர் ரன்மல் கொடித்துவக்குவின் ஆலோசனையின் பேரில், காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி மற்றும் பணிப்பாளர் அதன் விசாரணைகளை மேற்பார்வையிடுவதாக தெரிவிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்