யாழில் மோட்டார் சைக்கிள் விபத்தில் முதியவர் உயிரிழப்பு
Jaffna
Accident
By Vanan
யாழ்ப்பாணம் - கோண்டாவில் உப்புமட பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது.
கோண்டாவில் மேற்கைச் சேர்ந்த எஸ். விக்னேஸ்வரன் (வயது 67) என்பவரே உயிரிழந்துள்ளார்.
சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

குறித்த முதியவர் வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த வேளை மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த பெண் அவர் மீது மோதி விபத்துக்குள்ளானதில் முதியவர் படுகாயமடைந்த நிலையில் , யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
3ம் ஆண்டு நினைவஞ்சலி