யுத்தம் திண்ற ஈழ மண்ணை விழுங்கி ஏப்பம் விடத்துடிக்கும் இந்தியா..!
மன்னாரில் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைக்கும் செயற்பாடானது முழு இலங்கையை பொறுத்த வரையில் பாரிய பேசு பொருளாய் மாறியிருக்கிறது.
குறிப்பாக தமிழர் பிரதேச வளங்களை பயன்படுத்தி இந்திய முதலீட்டாளர்கள் இலாபம் ஈட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள் என்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படத்தோடு குறித்த மின் உற்பத்தி நிலையம் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின் முழுவதுமாக இலங்கைக்கு பயன்படுமா என்ற கேள்விகளும் எழுந்த வண்ணம் இருந்தன.
மேலும், குறித்த பகுதியில் காற்றாலை அமையபெறுவதால் மக்களின் வாழ்வாதாரங்கள் பாரிய அளவில் பாதிக்கப்படும் என்றும் அப்பகுதியில் மக்கள் வாழவே முடியாத நிலை ஏற்படும் என்றும் சமூக மட்டத்தில் பரவலான கருத்து பரிமாற்றங்கள் இடம் பெற்ற வண்ணம் உள்ளன.
இவ்வாறு இருக்க, உண்மையில் அங்கே என்ன நடக்கிறது ? ஆராய்கிறது ஐபிசி தமிழின் நெற்றிக்கண்

