உக்ரைனை மீட்க மார்ஷல் திட்டம் : ஐரோப்பிய ஒன்றியத்தில் புதிய நகர்வு
இரண்டாம் உலகப் போரினால் பேரழிவிற்குள்ளான ஐரோப்பா கட்டியெழுப்பப்பட்டதைப் போல, ரஷ்ய தாக்குதல்களால் அழிவடைந்துவரும் உக்ரைனை புனரமைப்பதற்கு ஒரு மார்ஷல் திட்டம் தேவையென ஜேர்மன் ஆட்சித்தலைவரான ஓலாஃப் ஸ்கோல்ஸ் தெரிவித்துள்ளார்.
பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் நகரில் இன்று ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களின் உச்சிமாநாடு இடம்பெற்றுவரும் பின்னணியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இரண்டாம் உலகப் போரில் அழிவடைந்த பிறகு மேற்கு ஐரோப்பாவை மீண்டும் கட்டமைக்க 1948 இல் மார்ஷல் திட்டம் என்ற அடிப்படையில் இயற்றப்பட்ட அமெரிக்க நிதியுதவி முயற்சிபெரும் உதவியை வழங்கியிருந்தது.
தற்போது அதேபாணியில் ரஷ்ய தாக்குதல்களால் அழிவடைந்துவரும் உக்ரைனை புனரமைப்பதற்கு ஒரு மார்ஷல் திட்டம் தேவையென ஜேர்மன் சாஞ்சலர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் தெரிவித்துள்ளார்.
ஜேர்மனியில் விரைவில் நடக்கவுள்ள ஜி 7 நாடுகளின் சந்திப்பின்போது உக்ரைனுக்கான மார்ஷல் திட்டத்தின் வரையறைகளை விவாதிக்க விரும்புவதாக ஓலாஃப் ஸ்கோல்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைன் மீண்டும் கட்டியெழுப்பட பில்லியன் கணக்கான டொலர் நிதியுதவி தேவைப்படும் என்பதால் ஐரோப்பிய நாடுகளும் நன்கொடை நாடுகள் மற்றும் சர்வதேச நிறுவனங்கள் இணைந்து செயற்பட்டால் மட்டுமே இது சாத்தியமாகும் என்று அவர் கூறினார்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்காக உக்ரைன் சமர்ப்பித்த வேட்புமனு குறித்து இன்று ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் ஒரு தீர்க்கமான தருணத்தை எடுக்கவுள்ள நிலையில், இந்த மார்ஷல் திட்டம் எனப்படும் நிதியுதவி முயற்சி குறித்த பேசுபொருள் நகர்த்தப்பட்டுள்ளது.
கடந்த வாரம் உக்ரைனுக்கு ஐரோப்பிய ஒன்றிய வேட்பாளர் தகுதியை ஐரோப்பிய ஆணையகம் வழங்கியிருந்தாலும், அந்த முடிவை ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களின் தலைவர் ஒன்றுகூடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

