டான் பிரியசாத் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது
நவ சிங்கள தேசிய இயக்கத்தின் ஏற்பாட்டாளர் டான் பிரியசாத் (Don Priyasath) காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் இன்று (11) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் (Katunayake International Airport) வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
டுபாயில் இருந்து இலங்கை வந்தடைந்த அவர் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நீதிமன்றில் முன்னிலை
அவரை நிக்கவெரட்டிய நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நிகவெரட்டிய காவல்துறையினர் விடுத்த பிடியாணை உத்தரவுக்கு அமைவாக இந்த கைது முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலும் டான் பிரியசாத் அரகல போராட்டத்தின் போது பாரிய வன்முறையில் ஈடுபட்டவர்களின் முதன்மையானவர் என குற்றம் சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |