கொழும்பில் கோர விபத்து - பரிதாபமாக உயிரிழந்த 3 பிள்ளைகளின் தாய்
கொழும்பு, பிலியந்தலையில் ஆடைத் தொழிலாளி ஒருவர் கார் மோதியதில் உயிரிழந்துள்ளார்.
விபத்துக்கு காரணமான காரின் சாரதியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
விபத்தில் உயிரிழந்தவர் பிலியந்தலை, தம்பே பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாய் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
நோயின் வீரியம் தாங்க முடியாமல்
விபத்தில் இறந்த பெண், வேலை முடிந்து வீதியின் வலது பக்கத்திலிருந்து இடது பக்கமாக கடக்கும் போது, வேகமாக வந்த கார் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
பலத்த காயமடைந்த பெண்ணை சந்தேகநபரான சாரதியே பிலியந்தலை மாவட்ட மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். எனினும், சிறிது நேரத்தின் பின்னர் அவர் உயிரிழந்தார்.
சந்தேகநபரின் கவனக்குறைவு மற்றும் பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சந்தேக நபர் கெஸ்பேவ நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார். பிலியந்தலை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
