அமைச்சர் ஒருவரின் முகநூல் கணக்கு மீது சைபர் தாக்குதல்
Facebook
Manusha Nanayakkara
Hackers
By Sumithiran
இலங்கையின் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் உத்தியோகபூர்வ முகநூல்கணக்கு இணையத்தள தாக்குதலை அடுத்து முடக்கப்பட்டது.
இலங்கையின் தொழிலாளர் சட்டங்களில் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் தொடர்பான விவாதத்தின் நேரடி ஒளிபரப்பின் போது அமைச்சரின் முகநூல் கணக்கு ஹேக் செய்யப்பட்டது.
ஆபாச உள்ளடக்கத்தை வழங்கும் வலைத்தளத்துடன்
சைபர் தாக்குதலைத் தொடர்ந்து, ஹேக்கர்கள் பேஸ்புக் பக்கத்தில் ஆபாச உள்ளடக்கத்தை வழங்கும் வலைத்தளத்துடன் இணைக்கும் இணைப்பைச் சேர்த்துள்ளனர்.
முகநூல் கணக்கை மீளமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
விசேட விசாரணை
சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைகளை மேற்கொள்ளுமாறு காவல்துறை மா அதிபரிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி