கடவுச்சீட்டு பெற காத்திருப்பவர்களுக்கு வெளியான முக்கிய அறிவித்தல்
Ministry of Defense Sri Lanka
Passport
Ananda Wijepala
By Thulsi
ஒரு நாளைக்கு 2500 கடவுச்சீட்டுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த தகவலை பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால (Ananda Wijepala) தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.
விரைவில் கடவுச்சீட்டுக்களை வழங்க நடவடிக்கை
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், முன்னர், ஒரு நாளைக்கு 1,100 கடவுச்சீட்டுக்கள் வழங்கப்பட்டதாக அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
அவசரமாக வெளிநாடு செல்ல இருப்பவர்கள், அத்தகைய சந்தர்ப்பங்களில் கடவுச்சீட்டுக்களை வழங்குவதற்கு ஒரு தனி வழி திறக்கப்பட்டுள்ளது.
இந்த வழியின் மூலம் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் ஒரு குழுவால் மதிப்பாய்வு செய்யப்படும் என்றும், விரைவில் கடவுச்சீட்டுக்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்