கல்வி முறையில் மாற்றம் தேவை - கல்வி அமைச்சு வெளியிட்ட தகவல்
Ministry of Education
A D Susil Premajayantha
Sri Lankan Schools
Education
By Dharu
புதிய கல்வி சீர்திருத்தம் தொடர்பாக ஆலோசனை கூட்டம் கல்வியமைச்சு கேட்போர் கூடத்தில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மற்றும் கல்வி இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்தகுமார் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது கருத்துத் தெரிவித்த அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, கல்வித்துறையில் பாரிய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.
ஏனைய நாடுகள் தமது கல்வி முறையை எதிர்கால தொழில்களுக்கு ஏற்றவாறு மாற்றியமைத்துள்ள போதிலும் இலங்கை இன்னும் அவ்வாறு செய்யவில்லை என அதன்போது அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
கலந்துறையாடல்
இவ் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சின் செயலாளர், மேலதிக செயலாளர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

4ம் ஆண்டு நினைவஞ்சலி