அரசை பலப்படுத்த சஜித் அணியினருக்கு அமைச்சுப்பதவி வழங்க யோசனை
"அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் நாம் அமைச்சுப் பதவிகளைக் கேட்கவில்லை.
அந்த அமைச்சு பதவிகளை ஐக்கிய மக்கள் சக்தி எம்.பிக்களுக்கு வழங்கி அரசைப் பலப்படுத்துமாறு அதிபர் ரணிலைக் கோருகின்றோம்."
இவ்வாறு சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அமைச்சுப்பதவி
இது தொடர்பில் நாமல் மேலும் தெரிவிக்கையில்,
"எங்களுக்கு அமைச்சு பதவிகள் தேவையில்லை.
மொட்டுக் கட்சியினர் அமைச்சரவையில் இருந்தால் ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து யாரும் அமைச்சு பொறுப்புக்களை ஏற்கமாட்டார்கள் எனக் கூறுகின்றனர்.
அமைச்சுப்பதவிகளை எமக்கு வழங்காமல் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களுக்கு வழங்கி அரசைப் பலப்படுத்துங்கள் என ரணிலிடம் எப்போதோ கூறிவிட்டோம்.
ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து பலர் அரசுடன் இணைய போவதாக ஒரு வருடமாக கூறுகின்றனர் ஆனால் இதுவரை எவரும் இணையவில்லை." என நாமல் தெரிவித்துள்ளார்.
